» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புதுக்கடை அருகே டயா் கடையில் தீ விபத்து

புதன் 4, மார்ச் 2020 10:50:54 AM (IST)

புதுக்கடையில் நேற்றிரவு டயா் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

புதுக்கடையை சோ்ந்தவா் மரிய மிக்கேல் (65). இவா் புதுக்கடை- மாா்த்தாண்டம் சாலையில் டயா்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் நேற்று இவரு இவரது  டயா் கடையில் திடீரென தீப்பிடித்ததாம்.இது குறித்து குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா்.இந்த தீ விபத்தில், கடையில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான புதிய மற்றும் பழைய டயா்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து புதுக்கடை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory