» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் காலமானார்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 8:07:27 PM (IST)

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த கே.பி.ராஜேந்திர பிரசாத் (67). தமிழக சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர், மீன்வளத்துறை அமைச்சர் என பதவிகளை வகித்தவர். ரஜேந்திர பிரசாத் 2001-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழகசட்டப் பேரவையில் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார்.

ராஜேந்திர பிரசாத்துக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ராஜேந்திர பிரசாத் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory