» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் : குமரி ஆட்சியர் தகவல்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 6:10:17 PM (IST)

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான, ஒரே மாதிரியான தனித்துவம்  வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான இணையதள பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே  தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத் திறனாளிகள் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே மாதிரியான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறவேண்டும். 

இத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குவழங்குவதற்கான இணையதள பதிவு சிறப்பு முகாம் 20.02.2020 அன்று பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய நகராட்சிகளிலும், 25.02.2020 அன்று நாகர்கோவில் மாநகராட்சி மற்றும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவிலிலும்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது.   

எனவே, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அல்லது குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (சமீபத்திய புகைப்படம்) ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு இணையதள பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை வழங்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory