» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வங்கி கட்டிடத்தில் இருந்த ஆந்தை குஞ்சுகள் மீட்கப்பட்டது

வெள்ளி 14, பிப்ரவரி 2020 1:50:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வங்கி கட்டிடத்தில் இருந்த ஆந்தை குஞ்சுகள் மீட்கப்பட்டது. 

தக்கலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடத்தை ஒரு ஆந்தை அடிக்கடி சுற்றி சுற்றி வந்தது. இதனால், சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் நேற்று கட்டிடத்தை சுற்றி பார்த்துள்ளார். அப்போது, கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஆந்தை கூடு கட்டி குஞ்சு பொரித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
இதுகுறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வங்கிக்கு விரைந்து சென்று ஆந்தையை பிடிக்க முயன்றனர். ஆனால், வீரர்களை கண்டதும் ஆந்தை தப்பி சென்றது. இதையடுத்து கூட்டில் இருந்த 4 குஞ்சுகளை தீயணைப்பு படையினர் மீட்டனர்.மீட்கப்பட்ட குஞ்சுகள் புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரிகோட்டை பல்லுயிர்பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory