» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் : ஆட்சியர் வெளியிட்டார்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 1:39:00 PM (IST)கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான, இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்,மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 23.12.2019 அன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றது. இந்த சிறப்பு சுருக்க முறைதிருத்தம் முடிவுற்று இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள், திருத்தம் செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம். 

கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்த வாக்காளர் விபரம் தொகுதி வாரியாக பின்வருமாறு
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory