» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்திய மாணவர் சங்கம் சார்பில் காதலர் தின கொண்டாட்டம்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 12:47:54 PM (IST)தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு, நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கார்த்திக் உட்பட ஏராளமான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஜாதி, மதம் கடந்து அன்பை போற்றுவோம் என்ற முழக்கத்துடன் பலுான்கள் பறக்க விட்டு மேலும், புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 


மக்கள் கருத்து

குமார்Feb 14, 2020 - 01:19:27 PM | Posted IP 173.2*****

புல்வாமா தாக்குதல் தினத்துக்கு அஞ்சலிசெலுத்தாமல் ...காதலர்தினம் கொண்டாடுறீங்க? போங்கடா ..போய் ஒழுங்கா படிக்கிறவழியப்பாருங்க.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory