» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 12:14:20 PM (IST)

தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்த அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது, தூத்துக்குடியில் மிளகாய் மையம், தென்காசியில் எலுமிச்சை மையம், ஏற்படுத்தப்படும். சேலம் புத்தரகவுன்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.விழுப்புரம் அழகன்குப்பம், செங்கல்பட்டு ஆலம்பரைக் குப்பத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க ரூ.235 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவுப்பூங்கா அமைக்கப்படும்.திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் புதிய குளங்களை ஏற்படுத்துதல், நீர் நிலைகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பாசன வசதிகளுக்கு ரூ.655 கோடி ஒதுக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory