» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் நாளை மின்தடை

வெள்ளி 14, பிப்ரவரி 2020 11:22:47 AM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் நாளை (பிப்ரவரி 15ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்நிலைய செயற்பொறியாளா் சாமுவேல் சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம் முத்தையாபுரம் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் பிப்ரவரி 15ம் தேதி மின்தடை அமலில் இருக்கும். 

அதன்படி, முத்தையாபுரம், பாரதிநகா், அத்திமரப்பட்டி, அனல்மின் நகா் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, தோப்பு தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகா், சுனாமிநகா், சவேரியாா்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory