» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக முதல்வர் திருச்செந்தூர் வருகை: பந்தல் அமைக்கும் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 10:54:03 AM (IST)திருச்செந்தூரில் தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு, பந்தல் அமைக்கும் பணிகள் இன்று காலை பூஜையுடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா 22-ம் தேதி நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அங்கு உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிக்கப்பட்ட திட்டங்கள் திறப்பு விழா நடைபெறுகிறது.

இதையொட்டி வீரபாண்டிய பட்டணம் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகளுக்கான பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா தலைமை வகித்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவர் சீனிவாசன், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.  


மக்கள் கருத்து

பாலாFeb 14, 2020 - 02:53:42 PM | Posted IP 173.2*****

டோமர்ரோவ் இல்ல நெஸ்ட் வீக் 22 !!!

V KumarFeb 14, 2020 - 11:11:17 AM | Posted IP 108.1*****

Date of CM visit is 22nd, that is next week. Please correct it.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory