» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

களியக்காவிளை அருகே இளம்பெண் தற்கொலை

வியாழன் 13, பிப்ரவரி 2020 8:27:09 PM (IST)

களியக்காவிளை அருகே இளம்பெண் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழக கேரள எல்லையான களியக்காவிளை அருகே செம்மான்விளையை சேர்ந்தவர் ரதீஸ். இவருடைய மனைவி விஜி (8). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. விஜி வீட்டில் வைத்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை பார்த்த கணவர் ரதீஸ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். 

பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி விஜி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விஜி தற் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.              


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory