» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு : கொரோனா வைரஸ் எதிரொலி

வியாழன் 13, பிப்ரவரி 2020 8:12:17 PM (IST)

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக காதலர் தினத்தன்று கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தங்கள் ஜோடிகளுடன் வந்து உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடுவார்கள். அவர்களின் கொண்டாட்டத்தை பார்க்கவும் அங்கு ஏராளமானவர்கள் திரள்வார்கள்.காதலர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் இன்றே கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் வெளிநாட்டு பயணிகள் பலரும் வந்து தங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெளிநாட்டு பயணிகள் கன்னியாகுமரி வரவில்லை. 

லாட்ஜ்களில் இதற்கான முன்பதிவும் நடைபெறவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்து போனது ஏன்? என்று விசாரித்ததில் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாகவே கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாகவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதன் காரணமாகவே காதலர் தினத்தை கொண்டாட வெளிநாட்டு பயணிகள் கன்னியாகுமரி வரவில்லை என தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory