» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் - தாம்பரத்திற்கு அந்தோத்யா ரயில் : பயணிகள் மகிழ்ச்சி

வியாழன் 13, பிப்ரவரி 2020 6:37:23 PM (IST)

நாகர்கோவிலில் இருந்து தினமும் தாம்பரத்திற்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரயில்களையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை தாம்பரத்திற்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்.

ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை. சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய். மூத்த குடிமக்களுக்கு 155ரூபாய்.நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி, மதுரை, திருச்சி , தஞ்சாவூர் விழுப்புரம் வழியாக மறுநாள் காலை 7மணிக்கு தாம்பரம்சென்றடைகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 8:44:01 PM (IST)

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நாளை தொடக்கம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 5:31:03 PM (IST)

யூடிஐடி அடையாள அட்டை வழங்கும் விழா

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 1:35:27 PM (IST)

மனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 12:08:32 PM (IST)


Sponsored Ads




Thoothukudi Business Directory