» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிராம செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வியாழன் 13, பிப்ரவரி 2020 3:30:59 PM (IST)தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதர செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினை எளிமைப்படுத்தி, கர்ப்பிணிகளுக்கு எளிதில் உதவித்தொகை கிடைத்திட வேண்டும், கணினியில் ஏற்படும் தாமதம், சிக்கல்கள் காரணமாக உதவித்தொகை திட்டம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே கணினியில் ஏற்றுவதை எளிமைப் படுத்த வேண்டும். செவிலியர்களை மிரட்டும் தொணியில் 17ஏ, 17பி மற்றும் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். 

ஊதிய முரண்பாடு மற்றும் பதவி உயர்வில் ஏற்படும் சிக்கல்களை களைய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் மற்றும் பொது சுகாதார துறை கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து சுகாதார செவிலியர் மற்றும் பொது சுகாதார துறை செவிலியர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

நிஜந்தன்Feb 13, 2020 - 04:12:06 PM | Posted IP 162.1*****

மிரட்டும் தோணியில் அல்ல தொனியில்..அதனை எளிமையாக மிரட்டும்வகையில் என மாற்றலாம்.. ஊதிய முரண்பாடுதான் சரி.., முறண்பாடு அல்ல நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory