» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

புதன் 12, பிப்ரவரி 2020 10:43:02 AM (IST)தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி  நடைபெற்றது. 

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள, மாநகராட்சி நிா்வாகம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி வருகின்றனா். இந்நிலையில், தூத்துக்குடி தாமோதர நகரில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. 

கிழக்கு பகுதி துனை ஆனையர் தனசிங், பொறியாளர் நாகராஜ், துனை ஆனையர்கள் காந்திமதி, ராமச்சந்திரன் ஆறுமுகம் மற்றும மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிறிய கடைகள், பெட்டிக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், பெரிய நிறுவனங்கள், கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரபாகு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 


மக்கள் கருத்து

TN69 Govt BusesFeb 13, 2020 - 03:43:53 PM | Posted IP 173.2*****

Keep going on with the support of the A to Z middle class to High-class businesses shops and shopping complexes too. Dismantle up to free width of 200feet roads Equally. Don't loot for money and other dashes. Broke all disturbing buildings. But you are broking steps, sunshades with randomly with fears as per the pressure of big shots and engineers of corporation. Shit

K.ganeshanFeb 12, 2020 - 09:56:44 PM | Posted IP 108.1*****

Good action by corporation.pl continue.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory