» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : பொங்கல் பண்டிகை எதிராெலி

செவ்வாய் 14, ஜனவரி 2020 5:53:19 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை எதிராெலி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாழை, பனையோலை, மஞ்சல்குலை, பொங்கல்பானை ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாெங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் மற்றும் வார இறுதிநாள் விடுமுறை என வரிசையாக வருவதால் கன்னியாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி மூலம் நகரில் முக்கிய பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் முன்னேற்பாட்டிற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory