» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தக்கலை அருகே மோட்டார் பைக் விபத்து- ஒருவர் பலி

செவ்வாய் 14, ஜனவரி 2020 5:06:58 PM (IST)

தக்கலை அருகே மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

குமரி மாவட்டம் தக்கலை முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் ( 54). இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்திருந்தார். பின்னர் இங்கிருந்து அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தக்கலை தொலைபேசி நிலையம் அருகே வரும்போது அவருக்கு எதிரே கார் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக காரும், பைக்கும் நேருக்குநேர் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு ஆபிரகாம் மேத்யூவிற்கு தலை மற்றும் கால் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்ற அவர் சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தின ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆபிரகாம் மேத்யூ மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டிவந்தது நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி பகுதியை சேர்ந்த மரியசெல்வம் (37) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory