» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமணம் ஆகாத வருத்தத்தில் இளைஞர் தற்கொலை

செவ்வாய் 14, ஜனவரி 2020 12:00:47 PM (IST)

ராஜாக்கமங்கலம் அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் இளைஞர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜாக்கமங்கலம் அனந்த நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு ( 34).இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் இவர் தனது தாயாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர் வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார்.

இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ்பாபு பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory