» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தென்னிந்திய திருச்சபையின் பிரதமப் பேராயராக ரசலம் தர்மராஜ் தேர்வு!

செவ்வாய் 14, ஜனவரி 2020 10:33:16 AM (IST)தென்னிந்திய திருச்சபையின் பிரதமப்பேராயராக (சி.எஸ்.ஐ. மாடரேட்டராக) தெற்கு கேரளா திருமண்டல பேராயர் ஏ.ரசலம் தர்மராஜ், துணை பிரதமப் பேராயராக (சி.எஸ்.ஐ. டிபுட்டி மாடரேட்டர்) ஆந்திரா மாநிலம் கரீம்நகர் திருமண்டலப்  பேராயர் ரூபன்  மாற்கு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திருச்சபை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும்,  இலங்கையையும் சேர்த்து 24 திருமண்டலங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. 24 திருமண்டலங்களையும் நிர்வகிக்க சினாடு பேரவை உள்ளது. இதற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதுபோல புதிய நிர்வாகிகள் தேர்தல் திருச்சியில் துவங்கியது.  இதில் கொச்சின், கிழக்கு  கேரளா, கொல்லம் கொட்டாரக்கரை, மத்திய கேரளா, மலபார்,  தெற்கு கேரளா, தமிழகத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி-நாசரேத், கன்னியாகுமரி, மதுரை-இராமநாதபுரம், திருச்சி-தஞ்சாவூர், வேலூர், சென்னை, கோயம்புத்தூர், இலங்கை-ஜாஃப்னா, கர்நாடகா மாநிலத்திலுள்ள கர்நாடகா மத்திபம், கர்நாடகா வடக்கு, கர்நாடகா தெற்கு, ஆந்திரா மாநிலத்திலுள்ள தோர்ணக்கல், கரீம்நகர், கிருஷ்ணா -கோதாவரி, மேடக், நந்தியால், ராயலசீமா ஆகிய 24 திருமண்டலங்களில் இருந்து சினாடு பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், பேராயர்கள், குருவானவர்கள் திருச்சியில் குவிந்துள்ளனர்.

தென்னிந்திய திருச்சபையின் 36-வது சினாடு பேரவை கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பிரதமப்  பேராயர் தாமஸ் கே. ஓமன் தலைமையில் துவங்கியது. இதனை முன்னிட்டு சினாடு உறுப்பினர்கள் பதிவு நடைபெற்றது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. பிரதமப் பேராயர் தேர்தலில் தெற்கு கேரளா திருமண்டலப் பேராயர் ஏ.ரசலம் தர்மராஜ் வெற்றி பெற்றார்.அதன் பின்னர் துணைப் பிரதமப் பேராயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கரீம்நகர் திருமண்டலப் பேராயர் ரூபன் மாற்கு வெற்றி பெற்றார். 2-வது நாள் நடைபெற்ற தேர்தலில் பொதுச்செயலாளராக மதுரை-இராமநாதபுரம் திருமண்டலத்தைச் சார்ந்த பெர்னாட்ஷ் ரத்தினரஜா, பொருளாளராக ஆந் திரா மாநிலம்,மேடக் திருமண்டலத்தைச் சார்ந்த டாக்டர் விமல் சுகுமார் ஆகியோர் வெற்றி பெற்னர். இவர்களது வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஆந்திரா மாநிலம்-கரீம்நகர் திருமண்டல லே செயலா ளரும், நாசரேத் அருகிலுள்ள ஒய்யான்குடியைச் சார்ந்த ஆந்திரா தொழிலதிபர் சாமுவே லுக்கு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சார்பில் முன்னாள் லே செயலாளர்கள் டி.எஸ்.எப்.துரைராஜ், டி.மோகன், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக் கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியின் முன் னாள் தாளாளர் ஏ.எம். விஜயராஜா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jan 14, 2020 - 01:21:35 PM | Posted IP 162.1*****

கறந்து சாப்பிடுங்கடா. மடுவையே அறுத்துறாதீங்க!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory