» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக பண மோசடி : போலீஸ் விசாரணை

திங்கள் 13, ஜனவரி 2020 8:23:16 PM (IST)

அஞ்சுகிராமம் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக 17 பேரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஞ்சுகிராமம் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகன் எட்வின் பிரபுதாஸ் ( 26).இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து வந்தாராம். இந்நிலையில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் குவைத் நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறினார்.

மேலும் அதற்காக ரூ.16 ஆயிரம் செலவு செய்ய வேண்டும் என்றும் அங்கு வேலைக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் பெற்றுத்தருவதாக கூறினாராம். இதனை நம்பிய எட்வின் பிரபுதாஸ் அந்த வாலிபரிடம் ரூ.16 ஆயிரம் கொடுத்தார்.பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தார். போனில் தொடர்பு கொண்டு பேசியபோது முறையான பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே பணத்தை திரும்பித் தருமாறு கேட்டார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.

இதனால் எட்வின்பிரபு தாஸ் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் எட்வின் பிரபுதாசை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக ஏமாற்றியது வி.கே.புரம் பகுதியை சேர்ந்த ஜெயதேவ ஜஸ்டஸ் என்பது தெரிய வந்தது.மேலும் இவர் நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் 17 பேரிடம் இதேபோல் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது  விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory