» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பத்திரபதிவு அலுவலகம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திங்கள் 13, ஜனவரி 2020 7:46:30 PM (IST)தூத்துக்குடி புதுக்கோட்டையில் 80 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பத்திரபதிவு அலுவலகத்தை வாகைகுளத்திற்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து சிபிஎம் ஆதரவுடன் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார்.  புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க தலைவர் பீட்டர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல் சண்முகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், கிளை செயலாளர் ரவி தாகூர், வியாபாரிகள் சங்க செயலாளர் முருகன், துணை தலைவர் பெரியசாமி, குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் துரைமணி, துணைதலைவர் முப்பிலியான் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி சார்பதிவாளர் எல்லையை கடந்து சுமார் 25 கிமீ தூரத்திலுள்ள வாகைகுளத்திற்கு பத்திரபதிவு அலுவலகத்தை மாற்றுவதற்கும், தனிநபருக்காக காலவிரயம், பொதுமக்கள் பணத்தை விரயம் செய்வதை தடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jan 14, 2020 - 09:57:18 AM | Posted IP 162.1*****

புதுக்கோட்டை வளர்ச்சி அடைந்த மாதிரி வாகைக்குளமும் வளர்ச்சி அடையட்டுமே!

MUDIVAIJan 14, 2020 - 08:44:40 AM | Posted IP 108.1*****

5 KM ONLY

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory