» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லால் அடித்து ஆட்டாே டிரைவர் கொலை : ஒருவர் கைது

திங்கள் 13, ஜனவரி 2020 12:07:20 PM (IST)

கல்லால் அடித்து ஆட்டாே டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் 10.01.2020 அன்று இரவு ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த கோட்டார் காவல் நிலைய எஸ்ஐ., சுந்தர்மூர்த்தி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் வட்டகரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்(44) என்பது தெரியவந்தது. 

இதுகுறித்த விசாரணையில் ராஜேஷின் நண்பர்கள் சிவா மற்றும் அவரது நண்பர் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷை கொலை செய்துள்ளார்கள். இதன்பின் சிவாவை கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory