» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருமணம் ஆகாத வருத்தத்தில் இளைஞர் தற்கொலை

திங்கள் 2, டிசம்பர் 2019 6:05:53 PM (IST)

மார்த்தாண்டம் அருகே மணப் பெண் அமையாத வருத்தத்தில் இளைஞர்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வசித்து வருபவர் ரதீஷ் குமார் ( 31). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.மேலும் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துவந்தனர். ரதீஷ் குமாருக்கு பெண் பார்த்துவந்த நிலையில் அவருக்கு மணப் பெண் அமையவில்லை எனவும் இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின் பகுதியில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். வீடு திரும்பிய பெற்றோர் ரதீஷ்குமார் மயங்கிக்கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

அருண்Dec 3, 2019 - 11:18:16 AM | Posted IP 106.1*****

அயோ பாவம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory