» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

திங்கள் 2, டிசம்பர் 2019 1:52:38 PM (IST)

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. 

குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ வணிக வளாகம் உள்ளது. இங்கிருந்து நாள் தோறும் குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் பூக்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படும். தற்போது கார்த்திகை மாதம் என்பதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. 

இந்த மாதத்தில் சபரிமலை செல்பவர்கள் மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக பூக்களின்  பயன்பாடுகள் அதிகமாக இருக்கும். எனவே பொதுவாக கார்த்திகை மாதம் முதல் பொங்கல் பண்டிகை முடியும் வரை, பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழையும், கடும் பனிப்பொழிவும் உள்ளது. 

குறிப்பாக திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும், குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால், பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory