» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் பழுதடைந்த சாலை சீரமைப்பு

திங்கள் 2, டிசம்பர் 2019 1:15:17 PM (IST)



நாகர்கோவில் பெதஸ்தா காம்பளக்ஸ் சந்திப்பில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் சேதமாகின. இதில் நாகர்கோவில் பெதஸ்தா காம்பளக்ஸ் சந்திப்பு சாலையும் குண்டும் குழியுமாக காணப்பட்டது. உடனே இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில்  பெதஸ்தா காம்பளக்ஸ் சந்திப்பு பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.  நாகர்கோவில் மாநகராட்சிக்கு வாகனஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory