» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு

திங்கள் 2, டிசம்பர் 2019 12:37:53 PM (IST)

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நாகர்கோவில், கோட்டாறு புனித சவேரியார் ஆலய பெருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கி டிச 3ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தேர்பவனி நாட்களில் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரள்வார்கள். இதனால் ஆண்டுதோறும் போக்குவரத்து மாற்றி விடப்படுவது வழக்கம். இந்தாண்டு வரும் 3ம் தேதி விழாவின் நிறைவு நாளாகும். 

இதையொட்டி இன்றும் நாளையும் (டிச 2,3) போக்குவரத்து மாற்றிவிடப்படுகிறது. இது தொடர்பாக நாகர்கோவில், கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் நகரில் கோட்டாறு புனித சவேரியார் ஆலய தேர்பவனி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நலன்கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் பீச்ரோடு, ஏஆர் கேம்ப் ரோடு, பொன்னப்பநாடார் காலனி, ராமன்புதூர், செட்டிக்குளம் வழியாக செல்ல வேண்டும். அதுபோன்று வடசேரி மற்றும் அண்ணாபேருந்து நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு ஜங்ஷன், பி.டபிள்யு.டி ரோடு வழியாக செட்டிகுளம் ஜங்ஷன், இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் டிசம்பர் 2ம் தேதி மதியம் 1 மணியில் இருந்து 3ம் தேதி இரவு திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory