» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுசீந்திரம் அருகே வாலிபர் தற்கொலை

திங்கள் 2, டிசம்பர் 2019 11:47:10 AM (IST)

சுசீந்திரம் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வசித்து வரும் முருகன்மகன் செல்வக்குமார் (21), பட்டதாரி.இவர், தன்னுடன் கல்லூரியில் படித்த ஒரு மாணவியை காதலித்து வந்ததாகவும், செல்வக்குமாருக்கும், அவரது காதலிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். 

செல்வக்குமார் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செல்வக்குமார் காதலித்து வந்த அந்த பெண் இவரை திருமணம் செய்து கொள்ளுமாறு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் செல்வக்குமார் தனக்கு தகுந்த வேலை கிடைத்த பிறகு அவரை திருமணம் செய்வதாக கூறி உள்ளார். இந்த நிலையில்தான் செல்வக்குமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட செல்வக்குமாரின் செல்போனை போலீசார் கைப்பற்றினார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory