» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி அருகே கணவன்- மனைவி தற்கொலை: போலீஸ் விசாரணை

திங்கள் 2, டிசம்பர் 2019 10:52:11 AM (IST)

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி காரனேஷ் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் முத்துகுமார் (37). இவரது மனைவி காந்தி (34), இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் காந்தி 2 முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் மன வேதனையடைந்த காந்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அவரது கணவர் முத்துகுமார் மனைவியின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இன்று காலை அக்கம் பக்கத்தினர் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ChinnaduraiDec 2, 2019 - 12:19:21 PM | Posted IP 162.1*****

Is not true

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory