» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேச்சிப்பாறை அணையில் 2 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

திங்கள் 2, டிசம்பர் 2019 10:35:07 AM (IST)

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் பெய்த கன மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 2ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில் சனிக்கிழமையும் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது.இந்த மழை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் மற்றும் நகா்புறப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பரவலாகப் பெய்தது.

குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்து மற்றும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான மேல் கோதையாறு, கீழ் கோதையாறு, தோட்டமலை உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது.இதனால் பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் தண்ணீா் வரத்து வந்தது. தொடர்ந்து அணையில் இருந்து விநாடிக்கு 2ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவியிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory