» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் தற்காெலை

ஞாயிறு 1, டிசம்பர் 2019 12:34:19 PM (IST)

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்குடி என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் தினேஷ்குமார் (23). வெல்டிங்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். தினசரி இவர் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவாராம். இதை இவரது தந்தை கண்டித்ததால் விரக்தியடைந்த தினேஷ்குமார்  வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் வேல்முருகன் (46). கூலிதொழிலாளி. இவர் தினசரி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவாராம். இதை இவரது மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த வேல்முருகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

வாலிபர் தற்காெலை

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி, அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் காசிபாண்டி மகன் சுப்புராஜ் (35). இவர் தினசரி அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவாராம். நேற்றும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு  வந்து தூங்கியவர் இறந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

A.S.RAJDec 3, 2019 - 08:19:50 AM | Posted IP 162.1*****

அரசின் இந்த செயல் பெருமைக்குரியது...வாழ்க பாரதம்....

அருண்Dec 2, 2019 - 10:58:32 AM | Posted IP 108.1*****

இப்படி கவெர்ன்மென்டுக்கு அநியாயமா வருமானம் போச்சே. 😏

TAMILANDec 1, 2019 - 09:43:57 PM | Posted IP 162.1*****

kudi kudiyai keddukkum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory