» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மர்ம காய்ச்சலுக்கு 25-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு ?

செவ்வாய் 19, நவம்பர் 2019 6:47:23 PM (IST)

திசையன்விளை அருகே மர்ம காய்ச்சலுக்கு 25-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகள் மோனி‌ஷா. இவளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டதாம். உடனே சந்திரசேகர், தனது மகளை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.உடனே அவர் மோனிஷாவை திசையன்விளை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஹகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி காலை மோனி‌ஷா பரிதாபமாக இறந்தாள்.

இந்த நிலையில் திசையன்விளை அரசு மருத்துவமனையில் மோனி‌ஷாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி மோனி‌ஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் இன்று அந்த பகுதியை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory