» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் தங்கநகை பறிப்பு

செவ்வாய் 19, நவம்பர் 2019 6:29:17 PM (IST)

களியக்காவிளை பேருந்து நிலையத்தில் பெண் மற்றும் குழந்தையிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி கேரள எல்லையான களியக்காவிளை எஸ்.டி. மாங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜகுமாரி ( 55). இவர் சம்பவத்தன்று மதியம் களியக்காவிளையில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து படந்தாலு மூடு சென்றார். அங்கிருந்து பேருந்தில் அவர் களியக்காவிளை சென்றார்.  பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. களியக்காவிளைம் வந்ததும் ராஜகுமாரி பேருந்திலிருந்து கீழே இறங்கினார்.

அப்போது அவரது கழுத்தில் கிடந்த சுமார் 3½ பவுன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையறிந்த ராஜகுமாரி நகையை  தேடினார். ஆனால் நகை கிடைக்கவில்லை. அதன்பின்தான் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory