» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கால்நடை சிகிச்சை ஊர்தி சேவை தொடக்க விழா

செவ்வாய் 19, நவம்பர் 2019 5:41:09 PM (IST)

நடமாடும் அவசர கால்நடை சிகிச்சை ஊர்தி சேவை தொடக்க விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2016-17-ன்கீழ் கிராம புறங்களில் நடமாடும் அவசர கால்நடை சிகிச்சை ஊர்தி சேவை வழங்குவதற்காக தமிழக முதல்வரால் 05.11.2019 அன்று சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா ஆம்புலன்ஸ் வாகனம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்.மு.வடநேரே,முன்னிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்கள் 19.11.2019 அன்று சிறப்பு நிகழ்ச்சியில் அம்மா ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கிவைத்தார்.  

உடன் மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) மரு.பா.நடராஜகுமார், உதவி இயக்குநர்கள் மரு நோபிள், மரு.ரிச்சர்டுராஜ் இருந்தனர். இவ்வாகனத்தினை கால்நடை வளர்ப்போர் 1962 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து பயன்படுத்திட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்,பிரசாந்த்.மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory