» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் 93 கடைகள் முற்றிலும் இடிப்பு : 46 வணிகவளாகங்களுக்கு சீல்

செவ்வாய் 19, நவம்பர் 2019 12:44:59 PM (IST)நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான மருத்துவமனை, வடசேரி ஜங்சனில் மாநகராட்சிக்குச் சொந்தமான 93 கடைகள் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

நாகர்கோவில் மாநகராட்சிக்குச் சொந்தமான 93 கடைகள், அரசு மருத்துவமனை ஆகியவை அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட தகவல் குமரி மாவட்ட மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு அடிப்படை கட்டமைப்பான சாலை வசதிக்கு மாநகராட்சி நிர்வாகம் பெரும் முயற்சி எடுத்துவருகிறது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த கடைகளின் முன் பக்கங்கள் பார்க்கிங் வசதிக்காக சுமார் 20 அடிவரை இடிக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன. ஆட்சியர் அலுவலக ஜங்சனில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் விதமாக, ஆட்சியர் அலுவலகத்தின் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு, அங்கிருக்கும் வளாகத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோட்டாறு ரயில் நிலையம் செல்லும் சாலை, வடசேரி, வேப்பமூடு சாலை என இதுவரை பத்திற்கும் மேற்பட்ட சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory