» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுசீந்திரத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

செவ்வாய் 19, நவம்பர் 2019 12:19:18 PM (IST)தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் சார்பில் நடைபெற்ற 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே,  தலைமையில், தேரூர் ரோடு, சுசீந்திரம், அசோகா மஹாலில்  நடைபெற்றது. 

விழாவில்,தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம்  முன்னிலையில்,  தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவன்கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் 7,565 பயனாளிகளுக்கு ரூ.31.67 கோடி கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஏக்கர் வாழை விவசாயத்திற்கு ரூ.5 ஆயிரம் இன்சுரன்ஸ் செய்தால், அவர்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.  விவாசாய பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் வரை அதற்கு காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற அனைத்து திட்டங்களையும் இந்த அரசு செம்மையாக நிறைவேற்றியுள்ளது. மக்களாகிய உங்களின் அனைத்து விண்ணப்பங்கள் மற்றும் கருத்துக்களை உடனடியாக அரசிடம் தெரிவித்து, அதற்கான தீர்வினையும் உடனுக்குடன் எடுக்க முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மூலம் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊட்டுவாழ்மடம் ரேசன் கடையை பிரிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு அகற்றும் சில இடங்களில் ரேசன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள மக்கள் ரேசன் பொருட்கள் பெறுவதற்கு சிரமப்படுகின்றனர் என்பதால், அதனை நிவர்த்தி செய்கின்ற வகையில், அரசின் சட்ட விதிகளுக்குட்பட்டு நடமாடும் ரேசன் கடைகள் திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன்,  அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப் பெருந்தலைவர் சேவியர் மனோகரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன் எக்ஸ்.எம்.எல்.ஏ,   மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் ஜெயசுதர்சன்,  கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தலைவர்சகாயராஜ், கூட்டுறவாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory