» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லாரி மீது மோட்டார் பைக் மோதி விபத்து- இளைஞர் பலி
திங்கள் 18, நவம்பர் 2019 8:01:53 PM (IST)
ஆரல்வாய்மொழி அருகே லாரி மீது மோட்டார்பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் சுபானந்தன். இவரது மகன் தமிழ் (25). இவர் சம்பவத்தன்று ஆரல்வாய்மொழியில் இருந்து முப்பந்தலுக்கு பைக்கில் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து மாலையில் வீடு திரும்பினார். ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது பைக்கில் வந்த தமிழ் எதிர் பாராதவிதமாக சாலை யோரம் நின்ற லாரியின் பின் பகுதியில் மோதினார். இதில் தூக்கிவீசப்பட்ட தமிழுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை தமிழ் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ம்தேதி ஆர்ப்பாட்டம் : விக்கிரமராஜா பேட்டி
வெள்ளி 13, டிசம்பர் 2019 1:54:40 PM (IST)

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:04:01 AM (IST)

கணவனை கொன்று விட்டு நாடகம் : மனைவி சிக்கினார்
வெள்ளி 13, டிசம்பர் 2019 10:43:53 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 10:19:21 AM (IST)

பணத்தை திரும்ப கேட்ட பெண் மீது தாக்குதல்
வியாழன் 12, டிசம்பர் 2019 8:43:44 PM (IST)

கொல்லங்கோட்டில் கல்லூரி மாணவி மாயம்
வியாழன் 12, டிசம்பர் 2019 8:32:08 PM (IST)
