» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹெல்மெட் சோதனை - 889 பேர் மீது வழக்கு

திங்கள் 18, நவம்பர் 2019 7:13:32 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிவந்ததாக 889 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நாகர்கோவிலில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் வாகனம் ஓட்டிவந்ததாக 103 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.இதேப்போல் தக்கலை பகுதியில் நடந்த வாகன சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்ததாகவும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் 309 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரியில் போலீசார் மேற்கொண்ட  வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், சீட் பெல்ட் அணியாமலும் முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 196 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராத தொகை விதித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 889 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory