» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷம்- முதியவர் கைது
திங்கள் 18, நவம்பர் 2019 6:04:48 PM (IST)
பறக்கையில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கையை சேர்ந்தவர் நீலகண்டன் (64). இவரது பக்கத்து வீட்டில் 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த மாணவி நீலகண்டன் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் நீலகண்டன் வீட்டுக்கு மாணவி சென்றார். அப்போது வீட்டில் நீலகண்டன் மட்டும் தனியாக இருந்தார். அவர் திடீரென மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, நீலகண்டனை தள்ளிவிட்டு விட்டு வீட்டுக்கு ஓடிச் சென்றார். நடந்தது குறித்து மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.அப்போது நீலகண்டன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீலகண்டனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ம்தேதி ஆர்ப்பாட்டம் : விக்கிரமராஜா பேட்டி
வெள்ளி 13, டிசம்பர் 2019 1:54:40 PM (IST)

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
வெள்ளி 13, டிசம்பர் 2019 11:04:01 AM (IST)

கணவனை கொன்று விட்டு நாடகம் : மனைவி சிக்கினார்
வெள்ளி 13, டிசம்பர் 2019 10:43:53 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 10:19:21 AM (IST)

பணத்தை திரும்ப கேட்ட பெண் மீது தாக்குதல்
வியாழன் 12, டிசம்பர் 2019 8:43:44 PM (IST)

கொல்லங்கோட்டில் கல்லூரி மாணவி மாயம்
வியாழன் 12, டிசம்பர் 2019 8:32:08 PM (IST)
