» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மின் கம்பத்தையே மூடியுள்ள செடி, கொடிகள் : வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

திங்கள் 18, நவம்பர் 2019 1:39:25 PM (IST)குழித்துறை அருகே மின் கம்பத்தை மூடும் அளவுக்கு செடி கொடிகள் வளர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு ஆறு குழித்துறை பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் செடிகொடிகள் மின்கம்பத்தையே மூடும் அளவுக்கு வளர்ந்து வயர்களில் படும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த மின் கம்பத்தில் ஏதாவது பழுது என்றால் வயர்மேன்கள் ஏறி பார்க்க முடியாத அளவுக்கு செடி கொடிகள் படர்ந்து மேலே செல்லும் வயர்கள் மீதும் பரவத் தொடங்கியுள்ளது. 

மின் கம்பத்தின் கீழே செடி கொடிகள் மிகவும் அடர்ந்து படர்ந்துள்ளதால் அதனுள்ளேயே ஏதாவது விஷப்பூச்சிகள் உள்ளிட்டவை தங்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே மின் வாரியத்தினர் உடனே மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory