» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

திங்கள் 18, நவம்பர் 2019 11:10:05 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை மாதப் பிறப்பான ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

இந்துக்களின் புனித மாதங்களில் ஒன்றாக காா்த்திகை திகழ்கிறது. இம்மாதத்தின் அனைத்து நாள்களிலும் வீடுகளின் முன்பு பெண்கள் தீபமேற்றி சிறப்பு வழிபாடுகளைச் செய்வாா்கள். காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் புனித நீராடிய பக்தா்கள், பகவதியம்மன் கோயிலில் குருசாமியை வணங்கி துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். 

இம்மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மட்டுமன்றி, மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில், பாா்வதிபுரம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களில் பெரும்பாலானோா், கன்னியாகுமரிக்கு வந்து செல்வாா்கள் என்பதால் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory