» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹோட்டலில் புகுந்து வியாபாரிக்கு அரிவாள் வெட்டு : மர்ம கும்பலுக்கு வலை

சனி 16, நவம்பர் 2019 8:41:38 PM (IST)

கன்னியாகுமரியில் ஹோட்டலுக்குள் புகுந்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள சுக்குப்பாறை தேரி விளையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (31).இவர் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10.15 மணி அளவில் இவர் தனது காரில் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா அருகே தனது காரை நிறுத்திவிட்டு அங்கு உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார். அப்போது 2 பைக்குகளில் 3 வாலிபர்கள் அந்த ஓட்டலுக்கு வந்தனர். முகமூடி அணிந்திருந்த அந்த 3 வாலிபர்களும் தங்களிடம் இருந்த அரிவாளால் கிருஷ்ணராஜை சரமாரியாக வெட்டினார்கள். இதனால் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் பயந்து ஓடினார்கள். 

இதற்குள் அந்த முகமூடி கும்பலும் பைக்கில் தப்பிச் சென்று விட்டது. படுகாயம் அடைந்த கிருஷ்ணராஜ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory