» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வங்கி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு மர்மநபர்களுக்கு வலை

வெள்ளி 8, நவம்பர் 2019 6:46:27 PM (IST)

களியக்காவிளையில் தனியார் வங்கி பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டை சேர்ந்தவர் அர்ச்சனா. இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பணி முடிந்து பேருந்தில் அதங்கோடு வந்து இறங்கி நடந்து சென்று  கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் பின்னால் வந்த மர்மநபர்கள் திடீரென அர்ச்சனா கழுத்திலிருந்த சுமார் மூன்று பவுன் செயினை பறித்து விட்டு மாயமாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory