» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வெள்ளி 8, நவம்பர் 2019 6:24:00 PM (IST)

மார்த்தாண்டம் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது 

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தார்கள். ஆனால் கார் நிற்காமல் மற்றொரு சாலையில் சென்று இதை தொடர்ந்து போலீசார் அந்த காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். 

பின்னர் காரை சோதனை செய்தபோது அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அரிசியுடன் காரை ஓட்டிவந்த  வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை புட்செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory