» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் திருட்டை தடுக்க சுழலும் கேமரா

வெள்ளி 8, நவம்பர் 2019 5:35:32 PM (IST)

கன்னியாகுமரியில்  கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க 10 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரியில்  தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்.இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டுமின்றி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு முக்கிய சீசன் காலங்களாக கருதப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

இதனை கண்காணித்து தடுக்கும் பொருட்டு முதற்கட்டமாக கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, மாதவபுரம் சந்திப்பு ஆகிய இடங்களில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory