» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்

வெள்ளி 8, நவம்பர் 2019 1:54:16 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. பறக்கும் படையினர் சோதனை நடத்தி ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தும் வருகின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை தனிதாசில்தார் சதானத்தத்திற்கு தகவல் வந்தது. 

அவரது தலைமையில் துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் அதிகாரி ரெதன் ராஜ்குமார், ஓட்டுனர் டேவிட் ஆகியோர் 3 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு சென்றனர்.  அப்போது பிளாட்பாரத்தில் 20க்கும் மேற்பட்ட சிறிய மூடைகளில் ரேஷன் அரிசி கட்டி வைத்திருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். அதனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory