» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விசைப்படகு மீனவர்கள் போராட்டம் 40-வது நாளாக நீடிப்பு

வெள்ளி 8, நவம்பர் 2019 1:41:16 PM (IST)

கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் 40-வது நாளாக நீடிப்பதால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்களும் ஏற்படுகிறது. குறிப்பாக பக்கத்து மாவட்டமான நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கும், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. 

இந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி முதல் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் 40-வது நாளாக நீடிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory