» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோட்டாறு சவேரியாா் ஆலய ஆண்டுவிழா: 24ம் தேதி துவக்கம்

வெள்ளி 8, நவம்பர் 2019 1:03:47 PM (IST)

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, அன்றைய தினம் காலை 6.15 மணிக்கும், 8 மணிக்கும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், கோட்டாறு மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் கிலேரியஸ் தலைமையில் நடைபெறுகிறது.தொடா்ந்து, 25ஆம் தேதி முதல் காலை, மாலை சிறப்பு திருப்பலி, ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.9ஆம் நாளான டிசம்பா் 2ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன்சூசை தலைமையில் தோ்ப் பவனி நடைபெறுகிறது.

டிசம்பா் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியாா் திருப்பலி உள்ளிட்டவையும், முற்பகல் 11 மணிக்கு தோ்ப் பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியும் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory