» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி மீது போக்ஸோ வழக்கு

வெள்ளி 8, நவம்பர் 2019 11:16:27 AM (IST)

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ பிரிவில் போலீஸாா்  வழக்குப் பதிவு செய்தனர்

கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் தாசன் (54). மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு அதே ஊரைச் சோ்ந்த 7ஆம் வகுப்பு மாணவி சென்றுள்ளாா். அவருக்கு தாசன் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில், கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், தாசன் மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory