» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆரல்வாய்மொழி அருகே மலைப்பாம்பு சிக்கியது

வியாழன் 7, நவம்பர் 2019 8:43:43 PM (IST)

ஆரல்வாய்மொழி அருகே சாலையில் கிடந்த மலைப்பாம்பை வாலிபர்கள் பாதுகாப்புடன் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆரல்வாய்மொழி குருசடி தேவசகாயம் மவுண்டு செல்லும் வழியில் கோட்டைக்கரை பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள 4 வழிச்சாலையில் சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடந்தது.இதை அந்த வழியாகச் சென்ற நாகக்குமார், ஐசக் ஆகியோர் பார்த்தனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மோதி மலைப்பாம்பு உயிரிழக்க வாய்ப்பு இருப்பதால் அந்த மலைப்பாம்பை அவர்கள் காப்பாற்ற முடிவு செய்தனர்.

முதலில் நகர முடியாமல் சாலையில் கிடந்த அந்த மலைப்பாம்பு சிறிது நேரத்தில் மெதுவாக ஊர்ந்துச் செல்லத் தொடங்கியதால் அந்த வாலிபர்கள் உடனடியாக வனத்துறைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டுனர்களை எச்சரிக்கை செய்து மலைபாம்பு மீது வாகனங்கள் மோதாமல் இருக்கும்படி செய்தனர்.

இந்த நிலையில் தீயணைப்பு வீரர் சக்திவேல் தலைமையில் அங்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் சாலையில் கிடந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிறகு அந்த மலைப்பாம்பு ஆரல்வாய்மொழி வனத்துறை சோதனைச்சாவடியில் ஒப்படைக்கப்பட்டது.வன ஊழியர்கள் பொய்கை அணைப்பகுதியில் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory