» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டாக்டரை மிரட்டி பணம் பறித்ததாக 2 பேர் கைது

வியாழன் 7, நவம்பர் 2019 8:27:00 PM (IST)

ஈத்தாமொழியில் டாக்டரை மிரட்டி பணம் பறித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் ஒருவருக்கு கடந்த 4ம் தேதி ராமபுரம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் போன் செய்து தனக்கு ஒரு லட்சம் நன்கொடையாக தரவேண்டும் என்றும் அகிலன் என்பவரிடம் பணத்தை கொடுக்க வேண்டும் பணம் தரவில்லை என்றால் பின் விளைவை சந்திக்க வேண்டும் என மிரட்டினாராம். அதன்படியே அகிலன் டாக்டரிடம் செல்ல அவரிடம் ஒரு லட்சம் பணம் கொடுத்தாராம். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி நாராயணன் மற்றும் அகிலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory