» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அமைச்சர் பாண்டியராஜனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ

வியாழன் 7, நவம்பர் 2019 8:10:09 PM (IST)

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. கூறும் போது,தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை பற்றி உண்மைக்கு புறம்பான, ஒரு அவதூறான, அநாகரீகமான செய்திகளை அவராக கற்பனையில் தெரிவித்துள்ளார். பாண்டியராஜனுக்கு குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்வது எல்லாம், அநாகரீகத்திற்கும் ஒரு எல்லை உண்டு. அதுவும் குறிப்பாக அமைச்சரவையில் உள்ளவர் கீழ்த்தரமான ஒரு செய்தியை வெளியிட்டு தன்னை விளம்பரப்படுத்துவதின் மூலம் எதுவும் சாதித்து விடலாம் என்ற அடிப்படையில் அவரது செயல்பாடுகள் உள்ளது தெரிய வருகிறது.

கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது பல்வேறு இயக்கங்களில் மாறி மாறி கடைசியாக அமைச்சர் பதவி கிடைத்தால்போதும் என்று முதல்வர் எடப்பாடியின் காலில் விழுந்தவர். அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகக்கூடிய பாண்டியராஜன், தலைவர் மு.க. ஸ்டாலினை அவதூறு பேசியதை கண்டிக்கிறோம்.யாரோ ஒருவரை மகிழ்விக்க, வேறு பதவியில் ஒட்டிக்கொள்ள நாகரீகமற்ற அரசியல் தமிழகத்தில் நடக்கிறது. அமைச்சர் பாண்டியராஜன் குமரி மாவட்டத்தில் வருகை தரும் போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory